போலீஸில் சரணடையும் 'த்ரிஷ்யம்' நாயகன்: கிளைமாக்ஸை மாற்றிய இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் கமலஹாசன் நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் சமீபத்தில் சீன மொழியில் Sheep Without a Shepherd என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் சீனாவின் சட்டப்படி போலீஸ் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சித்திரவதை செய்வதை அந்நாட்டு சென்சார் போர்டு ஏற்றுக்கொள்ளாது. அதேபோல் குற்றவாளி ஒருவர் தண்டனை அடையாமல் தப்பிபதையும் அந்நாட்டு சென்சார்போர்டு ஏற்றுக் கொள்ளாது என்பதால் கதையிலும் திரைக்கதையிலும் இந்த படத்தை ரீமேக் செய்த இயக்குனர் சாம்குவா என்பவர் சில மாற்றங்கள் செய்தார்.
இதன்படி கதை நடக்கும் இடத்தை சீனாவின் ஒரு நகரமாக காட்டாமல் கற்பனையில் ஒரு நகரத்தை உருவாக்கி அந்த நகரத்தின் போலீசார் சித்திரவதை செய்வது போல் காட்டினார். அதேபோல் இறுதிக்காட்சியில் கிளைமாக்ஸில் நாயகன் சரண் அடைவது போல் காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியே நாயகன் கடைசிவரை போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதுதான் என்ற நிலையில் சீனாவில் சரணடையும் போல் காட்டினாலும் அங்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உள்ளது என்பதும் வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘த்ரிஷ்யம்’ இரண்டாவது பாகத்தையும் சாம்குவாவே இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout