close
Choose your channels

'த்ரிஷ்யம்' பட குட்டிப்பாப்பாவின் க்யூட் குடும்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Friday, March 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே வெளியான ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ மற்றும் ’த்ரிஷ்யம் 2’ படங்களில் மோகன்லாலின் இரண்டாவது மகளாகவும், ’த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக் படமான ’பாபநாசம்’ படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாகவும் எஸ்தர் அனில் நடித்திருந்தார். ’த்ரிஷ்யம்’ முதல் பாகத்தில் குட்டிப்பாப்பாவாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து, கதாநாயகியாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் எஸ்தர் அனிலின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மா அப்பா மற்றும் சகோதரர்களுடன் எஸ்தர் அனில் இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment