'த்ரிஷ்யம்' நடிகை ஆஷா சரத்துக்கும் பாலியல் தொல்லையா? வழக்கு போடுவேன் என மிரட்டல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது சில நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் ’த்ரிஷ்யம்’ நடிகையும் பாலியல் துன்பத்திற்கு ஆளாகியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாள திரை உலகையே தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாலியல் தொல்லை விவகாரம் என்பதும் குறிப்பாக ஹேமா கமிஷன் அறிக்கைக்கு பின்னர் இந்த விவகாரம் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் காரணமாக நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட ஒட்டுமொத்த நடிகர் சங்க நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் ஆஷா சரத்துடன் நடிகர் சித்திக் நடித்துள்ள நிலையில் அவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள ஆஷா சரத், சித்திக்குடன் இணைந்து நடித்த போது எனக்கு எந்த பாலியல் தொந்தரவும் ஏற்படவில்லை என்றும், அவர் ஒரு சக நடிகராக, மரியாதை மிக்க நடிகராக, ஒரு நல்ல நண்பராகவே என்னிடம் பழகினார் என்றும் என்னிடம் அவர் தவறாக நடந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என்றும் இந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com