தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை விருந்து? கைதாகும் பிரபல நடிகைகள்?

  • IndiaGlitz, [Friday,May 24 2024]

பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை விருந்து நடந்ததாக காவல் துறையினர் கண்டுபிடித்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய 86 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பிரபல நடிகைகளும் இருப்பதாகவும் விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரு புறநகர் பகுதியில் தொழிலதிருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விருந்தில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதிரடியாக காவல்துறையினர் சோதனை செய்தபோது இந்த விருந்தில் நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் போதை மருந்து விருந்து வைத்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விருந்தில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நடிகை ஹேமா, நடிகை ஆஷா ராய் ஆகியோர் பங்கேற்றதாக போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இரு நடிகைகள் உள்பட 86 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை செய்த பிறகு கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஹேமா மற்றும் நடிகை ஆஷா ராய் ஆகிய இருவரும் பண்ணை வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம், ஆனால் அங்கு போதை விருந்து நடைபெற்றது எங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கோல்டன் விசா வாங்கியவுடன் மோடி திறந்து வைத்த கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கிய நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி அபுதாபியில் திறந்து வைத்த இந்து கோயிலுக்கு

சூர்யா - கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக  அந்தரத்தில் பறந்த அனுபவம்.. 'கோட்' பட நடிகையின் வைரல் பதிவு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் நடிக்கும் நடிகை முதல் முறையாக அந்தரத்தில் பறந்த அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளரின் அதிரடி பதில்..!

இசைஞானி இளையராஜா தனது பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில்

ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவர்.. கன்னத்தில் ஒரு பளார்.. அமலாபால் லேட்டஸ்ட் வீடியோ..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது தலை முடியை ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவரை கன்னத்தில் செல்லமாக அடிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.