DRS என்றால் தோனி ரெவ்யூ சிஸ்டமா? மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் தல..!

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

கிரிக்கெட் விளையாட்டில் DRS என்பது உண்டு என்பதும் அதற்கு Decision Review System என்பது பொருள் என்பதும் கிரிக்கெட் தெரிந்த அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தோனி இந்த DRS முடிவு எடுப்பதில் மின்னல் வேகத்தில் உள்ளார் என்றும் அவரது முடிவுகள் பெரும்பாலும் மிக சரியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் போது அவரது பேட்டில் பந்து பட்டு தோனி கேட்ச் பிடித்தார். ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை என்பதை அடுத்து தோனி ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனே DRS முடிவெடுத்தார். மூன்றாவது அம்பயர் பார்வையில் அது அவுட் என தெரியவந்ததை அடுத்து சூரியகுமார் யாதவ் நடையை கட்டினார். தோனி அவ்வளவு உறுதியாக கொஞ்சம் கூட யோசிக்காமல் உறுதியாக DRS முடிவை எடுத்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

அதே போட்டியில் 20 வது ஓவரின் கடைசி பந்தை பிரிட்டோரியஸ் வீசிய போது அந்த பந்து வைடு என பேட்ஸ்மேன் அம்பயரிடம் டிஆர்எஸ் எடுத்தார். ஆனால் மூன்றாவது அம்பயர் முடிவு வருவதற்கு முன்பே அது வைடு பந்து அல்ல என்பதை முடிவு செய்த தோனி, மைதானத்தை விட்டு வெளியேற தொடங்கினார். மூன்றாவது அம்பயர் ரிவ்யூ பார்த்து அது வைடு பந்து இல்லை என்று கூறும்போது தோனி கிட்டத்தட்ட மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். அம்பயர் முடிவை அறிவிக்கும் முன்பே தோனி அந்த பந்து வைடு இல்லை என்பதை சரியாக கணித்து மைதானத்தை விட்டு வெளியேறியதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் DRS முடிவை மிகச் சரியாக மின்னல் வேகத்தில் தோனி முடிவெடுப்பதை அடுத்து நெட்டிசன்கள் DRS என்பதை Dhoni Review System என அழைத்து வருகின்றனர்.

]