உயிரோடு புதைத்த மக்கள்… கரைபுரளும் வெள்ளம்… கேரளாவில் தொடரும் அவலம்!

  • IndiaGlitz, [Monday,October 18 2021]

கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் தெற்கு பகுதியின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருங்கு ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆக அதிகரித்து இருக்கிறது.

கேரளா ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இதையடுத்து கடந்த சில தினங்களாக கடற்கரை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் 115 மி.மீ முதல 204 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இதனால் ஆங்காகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. மண்ணரிப்பினால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் நிலச்சரிவில் சிக்கி மக்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியில் உள்ள கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொக்கையாறு அடுத்த பூவஞ்சி எனும் கிராமத்தில் 3 அடுத்தடுத்த வீடுகள் இடித்து மண்ணிற்குள் புதைந்துள்ளன. இந்த விபத்தில் 23 பேர் மண்ணிற்குள் சிக்கியதாகவும் இதில் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 6 பேரை தேடும்பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இதைத்தவிர கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் 8 வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளன. பத்தினம் திட்டா பகுதி முழுவதும் கடும் வெள்ளத்தால் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் கூட்டிக்கல்லில் மட்டும் 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அடுத்து பெருமேடு பகுதியில் ஒருவரின் உடலும் நேற்று இடுக்கியில் உள்ள காஞ்சார் பகுதியில் 2 உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

More News

பாவாடை தாவணியில் நடிகை ரோஜா: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகைகள் சிலர் திடீரென ஸ்லிம் ஆகி தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்

இந்த வாரம் டார்கெட் செய்யப்படும் இரண்டு பெண் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கும் போட்டியாளர் குறித்த நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும், திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும்

குஷ்பு, மீனாவுடன் ரஜினியின் 'அண்ணாத்த' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்

'கர்ணன்' படத்திற்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் ஒருவர் தற்போது தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்' என்ற படத்திலும் இணைந்துள்ளார். 

'விஷால் 32' படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டர்!

நடிகர் விஷாலின் 32வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு