பட்டப்பகலில் காரை கடத்த முயன்ற சிறுமிகள்: பரிதாபமாக உயிரிழந்த உபேர் டிரைவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
60 வயதிற்கு மேல் உள்ள முதியவர் ஒருவர் உபேர் நிறுவனத்திற்காக உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அவருடைய காரை கடத்த முயன்ற இரண்டு சிறுமிகளால் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் அன்வர் என்ற 66 வயது நபர் உபேர் ஈட்ஸ் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது காரில் திடீரென இரண்டு சிறுமிகள் ஏறி அவரை அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்த முயன்றனர். அப்போது அன்வர் காரின் கதவைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்
சிறுமிகள் காரை மிக வேகமாக ஓட்டிய நிலையில் திடீரென அந்த கார் ஒரு திருப்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அன்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்
இந்த நிலையில் இந்த கார் விபத்து நடந்த இடத்தின் அருகில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் இருந்ததை அடுத்து அவர்கள் இருவரும் காரில் இறங்கி ஓட முயன்ற சிறுமிகளை வளைத்துப் பிடித்து போலீசார் வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
சிறுமிகளால் உயிரிழந்த அன்வர் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் காரணமாக வந்திருந்தார் என்பதும் அவரது மனைவி குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் பாகிஸ்தானில் உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 15 வயது உடையவர்கள் என்றும் அவரது அவர்களது வயதை கணக்கில் கொண்டு அவர்களது புகைப்படம் மற்றும் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது . மேலும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறார் குற்றவாளிகளின் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com