'த்ரிஷ்யம் 2' ரீமேக் குறித்த அதிகாரபூர்வ தகவல்: நடிகர், நடிகையர் யார் யார்?

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பதும் ஓடிடியில் வெளியான போதிலும் இந்த படம் நல்ல வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே ’த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் வெங்கடேஷ், மீனா, நதியா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தெலுங்கை அடுத்து ’த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’த்ரிஷ்யம் 2’ ஹிந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

’த்ரிஷ்யம் முதல் பாகம் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா சரண், தபு நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர்களே தொடர்ந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தமிழ் நடிகை வீட்டில் நடந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

அஜித் நடித்த 'ஏகன்' ஜீவா நடித்த 'கோ' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகையின் சகோதரர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை தெரியுமா? கேளுங்கள் ஆடியோ வடிவில்!

தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை, தட்பவெட்ப நிலையையும் அதன் மாற்றங்களையும் கூட புனித தேவதைகளாகத்தான் புரிந்து கொள்கின்றனர்.

முதல் தலைமுறை வாக்காளர்கள் யாரை நம்புகிறார்கள்? விளக்கும் பிரத்யேக வீடியோ!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

தமிழகத்தின் 3 ஆவது பெரிய தலைவராக சீமானை கருத முடியுமா? பரபரப்பு வீடியோ!

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது

சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் தியேட்டர் உரிமையாளரின் குரல்! பிரச்சனைகள் தீருமா?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தியேட்டர் உரிமையாளரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது