close
Choose your channels

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 'த்ரிஷ்யம்' பட நடிகை.. வைரல் புகைப்படம்..!

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மோகன்லால், மீனா நடிப்பில் உருவான ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்த நடிகை இணைந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் நடித்த சாந்தி மாயாதேவி என்பவர் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம் 2’ மற்றும் ‘ராம்’ உட்பட பல மலையாள படங்களில் நடித்த சாந்தி மாயாதேவி, தற்போது ‘லியோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சாந்தி மாயாதேவி இணைந்து உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுத்து இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment