சீன மொழியில் வெளியாகிறது த்ரிஷ்யம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீத்து ஜோசப் இயக்கி மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்திருந்த த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது.
வெற்றிப்படம் ஆக மாறியதால் இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமலஹாசன் நடித்து ஜீத்து ஜோசப்பே இயக்கி பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்தது. அதே போல தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்களம் போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.
ஹிந்தியில் அஜய் தேவ்கனும், தெலுங்கில் வெங்கடேஷும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்திருந்தார்கள். இப்போது இந்த படம் சீன மொழியில் ரீமேக் செயப்பட்டுள்ளது. A sheep without a shepherd என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்திருந்தது, தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட மலையாள படம் என்கிற பெருமையை த்ரிஷ்யம் அடைகிறது.
Here is the teaser for #Drishyam Chinese remake #SheepWithoutAShepherd
— general (@generalmyth) December 14, 2019
Movie is releasing on December 20th. pic.twitter.com/gR2eIaV3sQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com