கமல்ஹாசனை அடுத்து 'த்ரிஷ்யம்' இயக்குனர் தேர்வு செய்த பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறிய மாநிலமான கேரளாவில் சுமார் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட ஒரு சின்ன பட்ஜெட் படமான 'த்ரிஷ்யம்' இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் ரூ.75 கோடி வசூல், திரையுலகினர்களை வியக்க வைத்தது மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளி குவித்தது. இந்த பெருமை அனைத்துமே இந்த படத்திற்காக வலிமையான திரைக்கதை எழுந்திய இயக்குனர் ஜீத்துஜோசப் அவர்களையே போய்ச் சேரும் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.
'த்ரிஷ்யம்' படத்தை அடுத்து ஜீத்துஜோசப் இயக்கியுள்ள 'லைஃப் ஆப் ஜோசூட்டி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஜீத்து ஜோசப்பின் அடுத்தபடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜீத்துஜோசப், தற்போது தான் எழுதி வரும் கதை ஒன்றினை நடிகர் தனுஷை மனதில் வைத்தே எழுதி வருவதாகவும், இதுவரை தான் தனுஷை நேரில் சந்தித்தது இல்லை என்றாலும், திரைக்கதைக்கு முழுவடிவம் கொடுத்த பின்னர் தனுஷை விரைவில் சந்திப்பேன்' என்றும் கூறியுள்ளார்.
தன்னுடைய பாபநாசம்' படத்தில் கமல் மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்ற அவருடைய கணிப்பு மிகப்பெரிய வெற்றியை தந்தது போலவே, தனுஷுடன் இணையும் இந்த படமும் மாபெரும் வெற்றியை பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜீத்துஜோசப்-தனுஷ் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும், இவர்கள் இணையும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments