'த்ரிஷயம்' ரீமேக் 'பாபநாசம் 2' படத்திற்கு முன்பே 'பாபநாசம் 3' ரிலீஸ் ஆகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷயம்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பாக தமிழில் இந்த படம் கமலஹாசன் கௌதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’த்ரிஷயம்’ படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ’த்ரிஷயம்’ படத்தின் இரண்டாவது பாகமும் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தமிழில் மட்டும் இந்த படத்தின் ரீமேக் காலதாமதமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ’த்ரிஷயம் 3’ படத்தை உருவாக்க ஜித்து ஜோசப் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மீனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்களை வைத்து இயக்க இருப்பதாகவும் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் ’த்ரிஷயம் 3’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழில் ’பாபநாசம் 2’ திரைப்படம் வருவதற்கு முன்பே ’பாபநாசம் 3’ திரைக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments