நாளை முதல் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2': மோகன்லால் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடி தளத்தில் ‘த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது என்பதும் முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் ஒரு சில நாடுகளில் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சற்று முன்பு நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் திரையரங்குகளில் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறியுள்ள மோகன்லால் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே மோகன்லாலுக்கு அரபு நாடுகளில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் மோகன்லாலின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.