காஃபி பிரியரா நீங்கள்… கொரோனா நேரத்தில் மகிழ்ச்சி தரும் அட்டகாசமான தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஃபி பிடிக்காத மனிதரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உற்சாகம் கொடுக்கும் ஒரு பானமாக இந்த காஃபி தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் காஃபியை அருந்தும்போது கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 10% குறைவாகக் காணப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தில் 40 ஆயிரம் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் காஃபி என்பது கொரோனா பாதிப்பு மற்றும் அதன் இறப்பு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் காஃபி அருந்தும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் விளைவுகள், கொரோனா நோய் தாக்கத்தை குறைக்க உதவும் எனக் கண்டுபிடித்து உள்ளனர்.
மேலும் காஃபி குடிப்பதால் சி.ஆர்.பி, இன்டர்லூகின்-6 (ஐ.எல்-6), மற்றும் டியூமர் நெக்ரோஸில் காரணி I (டி.என்.எஃப்) போன்ற அழற்சி பயோமார்க்ஸர்களுடன் நேர்மறையான முடிவுகள் கிடைக்கின்றன. இதனால் தினமும் ஒரு காஃபி அல்லது அதற்கு மேற்பட்ட காஃபிகளை அருந்தும் இளைஞர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு 10% குறைந்து காணப்படுவது உறுதியாகிறது.
இதே காஃபி வயதானவர்களிடம் நிமோனியாவின் தாக்கத்தை குறைக்க உதவும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்தும் விஞ்ஞானிகள் சில பரிந்துரைகளை வெளியிட்டு உள்ளனர்.
அதில் குறைந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி, அதிக காய்கறிகளை உட்கொள்வது கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். மேலும் காய்கறிகளை உட்கொள்ளும்போது நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்க உதவுகிறது என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கின்றனர்.
இதனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை குறைத்துக் கொண்டு அதிக அளவு பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை பாதுகாப்பாக தவிர்க்க முடியும் எனவும்
அந்த வகையில் நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்து காரணிகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி நோய்த் தாக்கத்தை குறைக்கிறது. எனவே கொரோனா நேரத்தில் ஒரு பாதுகாப்பான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டிய தேவையினையும் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஃபி நன்மைகள்-
நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் நமது செல்களுக்கு ஏற்படும் அபாயத்தில் இருந்து நம்மை பாதுகாக்க காஃயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உதவுகின்றன. இதனால் காஃபி அருந்துவதை மருத்துவர்கள் வரவேற்கின்றனர்.
மேலும் காஃபியும் ஒரு பழம் என்ற முறையில் இது உடலுக்கு ஊட்டச்சத்து கொண்ட ஒரு பொருளாகவும், எனர்ஜி பொருளாகவும் பயன்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதயம் சம்பந்தமான நோய்களினால் ஏற்படும் உயிரிழப்பை இந்த காஃபி கணிசமாகக் குறைப்பதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் காஃபி உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் ஒரு பானமாகவே கருதப்படுகிறது. ஆனால் ஒருகுறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்த காஃபியை அருந்தும்போது அதுவே விஷயமாக மாறிவிடும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. அதனால் தினமும் 1 அல்லது 2 என்ற அளவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வதும் நலம்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற காஃபி பொருட்களை அருந்தும்போது குழந்தையின் எடை குறைந்து போதல், கருச்சிதைவு ஏற்படுதல் போன்ற அபாயங்களும் இருக்கின்றன. இதனால் காஃபி குறித்து எச்சரிக்கையாக இருப்பதும் நலம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com