கொரோனாவை கட்டுப்படுத்த இதைக் குடிங்க… ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Friday,July 17 2020]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொது மக்களுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. முன்னதாக “ஆர்கனிசம் ஆல்பம் 30” என்ற ஹோமியோபதி மருந்தை அறிமுகப்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்தாகச் செயல்படும் எனக் கூறியிருந்தது. தற்போது கொரோனாவை சுயக்கட்டுப்பாட்டில் வைப்பதற்கு “கபசுர நீர்” மிகுந்த பயனைத் தரும் என ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தீவிரம் அடைந்து வருகிறது. எனவே பொது மக்கள் சுயப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும் நோய்த்தொற்று தீவிரம் அடையாமல் தடுப்பதற்கும் கபசுர நீர் நல்ல பலனைத் தரும் எனத் தெரிவித்து இருக்கிறது. அதைத்தவிர ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ குணாம்சங்களைக் கொண்ட மருந்துகளை நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தலாம் எனவும் கூறியிருக்கிறது. நோய்த்தொற்றின் ஆரம்பத்தில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை இந்த மாதிரியான மருத்துவங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடும். அதனால் ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டாலும் தீவிரம் அடையாமல் தடுத்துவிடலாம் எனவும் கூறியிருக்கிறது.
துளசி இலை, இஞ்சிச்சாறு, மஞ்சள் கலந்த சுடுநிர் போன்றவற்றை காய்ச்சி அடிக்கடி பருகுவதால் நோய்த்தொற்று கிருமிகளிடம் இருந்து தனிநபர் பாதுகாப்பினை பெற முடியும். மிளகு நீருடன் தேன் கலந்து காய்ச்சி குடிக்கும்போது இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். கொரோனாபோன்ற பெருந்தொற்று நேரங்களில் பொது மக்கள் அவர்களுடைய சுய பாதுகாப்பினை அவர்களாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும். எனவே சமூக விலகல், பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.