ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படத்தில் செல்வராகவன்.. டைட்டில், நாயகி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் ’ஃபர்கானா’ என அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். அவர் தான் ’ஃபர்கானா’ என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் வெங்கடேசன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’ஒரு நாள் கூத்து’ ’மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே ’டிரைவர் ஜமுனா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Our next film!!@aishu_dil in & as #Farhana
— SR Prabhu (@prabhu_sr) October 5, 2022
Directed by @nelsonvenkat@selvaraghavan @JithanRamesh @Aishwaryadutta6 @justin_tunes @gokulbenoy @EditorSabu @dreamwarriorpic#ஃபர்ஹானா pic.twitter.com/88CWulgmOd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com