சமந்தாவின் அடுத்த தமிழ்ப்படம்: முன்னணி நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,October 15 2021]

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம், சமந்தாவின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் சமந்தாவின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை சாந்தரூபன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்ஆர் பிரபு அவர்கள் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.