ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ட்ரீம் வாரியர் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது.
கார்த்தி நடித்த ’சகுனி’ படத்தை முதலில் தயாரித்த இந்நிறுவனம் அதன்பின் ’ஜோக்கர்’ ’காஷ்மோரா’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’அருவி’ ’என்ஜிகே’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தது.
இந்த நிலையில் தற்போது ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ’வட்டம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த நயன்தாராவின் O2 திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What if the start and end are the same point?
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 27, 2022
Here’s #VattamFirstLook #Vattam #வட்டம் @Sibi_Sathyaraj @andrea_jeremiah @AthulyaOfficial @nivaskprasanna @sukameekannan @prabhu_sr @disneyplusHSTam #VattamOnDisneyplusHotstar pic.twitter.com/Gb25NLsedu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments