பயன்பாட்டுக்கு வந்த 2DG கொரோனா சிகிச்சை தூள் மருந்து? எங்கு கிடைக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் தூள் வடிவிலான 2DG எனப்படும் ஒரு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து இந்தியாவில் தற்போது அவசரகால அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதும்.
மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO மற்றும் ஹைத்ராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து 2DG எனும் தூள் வடிவிலான கொரோனா சிகிச்சை மருந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தயாரித்துள்ளனர். இந்த மருந்துக்கான 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து தற்போது இந்திய மருத்துக் கழகம் இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது 2DG கொரோனா சிகிச்சை மருந்து இந்தியாவில் அவசரகால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது
அதன் முதற்கட்டமாக டெல்லி மருத்துவமனைக்கு 10 ஆயிரம் 2DG கொரோனா சிகிச்சை மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். இந்த மருந்தை தண்ணீரில் கலந்து பயன்படுத்தும்போது குறைவான மற்றும் மிதமான தொற்று பாதிப்புள்ளவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா சிகிச்சைக்கு உலகம் முழுவதும் பல்வேறு மூக்கு வழி, வாய் வழி மருந்துகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய விஞ்ஞானிகள் ஒரு வெற்றிகரமான சிகிச்சை மருந்தை கண்டுபிடித்து இருப்பது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments