ஆன்மீக அரசியல் இங்கு எடுபடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்ததோடு, அதற்கான பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளார். இதுவரை யாரும் கூறாத ஆன்மீக அரசியலை தான் கடைபிடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியபோது, 'தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திராவிட கட்சிகள் தான் எப்போதும் ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. அதனால் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எதுவும் இங்கு எடுபடாது, என்று கூறியுள்ளார்

மேலும் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட கதையாக  புரட்சித் தலைவர் எம்ஜிஆரை நினைத்து நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். யாரும் இங்கு மீண்டும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது' என்று அமைச்சர் தெரிவித்தார்

அமைச்சரின் கூற்றுப்படி ஆன்மீக அரசியல் தமிழகத்தில் எடுபடாதா? அல்லது ரஜினியின் புதிய பாதை ஆச்சரியத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆளவேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆளவேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது.

'தளபதி 62' படத்தில் மீண்டும் 'மெர்சல் மேஜிக்!

'தளபதி 62' படத்திலும் தொடரும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் 'தளபதி 62' படத்தில் இணைவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி சந்தித்த முதல் நபர்

ரஜினிகாந்த கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் அறிவிப்பை தெளிவாக அறிவித்ததோடு, அதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்து வரும் நிலையில் நேற்று அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்

அரசியல் அறிவிப்புக்கு பின் இணையதளம், செயலியை தொடங்கிய ரஜினிகாந்த்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் நேற்று தனது வீட்டின் முன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய ரஜினிகாந்த், நேற்று புதிய இணையதளம் மற்றும் செயலி குறித்த அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ளார்.

சூர்யா 36' படத்தின் புதிய அறிவிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.