'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதன் பின்னர் ’திரௌபதி’ ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த நிலையில் மோகன் ஜி அடுத்த திரைப்படத்திற்காக தயாராகி வரும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தின் நாயகன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ’திரௌபதி’ மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான ’ருத்ரதாண்டவம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் வசூல் அளவிலும் இந்த படங்கள் திருப்திகரமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட இரண்டு படங்களும் ஒருசில சர்ச்சையை ஏற்படுத்தினாலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல லாபத்தைக் கொடுத்தது என்பதால் அவருடைய அடுத்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் நாயகன் நட்டி நடராஜ் என்று அறிவித்துள்ளார். ’சதுரங்கவேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த நட்டி நடராஜ் இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Happy to inform you all that @natty_nataraj sir is on board for my next movie.. Shoot starts this month.. More updates soon.. #ProductionNo3 @ProBhuvan @Gmfilmcorporat1 pic.twitter.com/ZfZsvenwYA
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com