இருக்கவே இருக்கு 'யூடியூ': 'திரெளபதி இயக்குனர் அதிரடி
- IndiaGlitz, [Thursday,February 20 2020]
ஜி மோகன் இயக்கிய ‘திரெளபதி திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த டிரைலர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு சிலரும் இந்த திரைப்படத்தை திரையிட்டே ஆக வேண்டும் என்று ஒரு சிலரும் போஸ்டர்கள் ஒட்டி தங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து இந்த படத்திற்கு இலவச விளம்பரம் தேடித் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். நடிகை கவுதமி உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் இந்த படத்தை பார்த்ததாகவும், 2 மணி நேரம் 34 நிமிடங்கள் கொண்ட படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 14 இடங்களில் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து, அந்த 14 காட்சிகளிலும் ஆடியோவை மட்டும் கட் செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து இயக்குனர் ஜி.மோகன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இந்த கத்திரி தியேட்டருக்கு மட்டும் தான். அதுவும் முதல் 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சிகளில் தான்.. சொல்ல வந்த கருத்து அப்படியே அனுமதிக்கப்பட்டு இருக்கு.. தணிக்கை குழு மிக நியாயமாக நடந்து கொண்டார்கள்.. அவர்களின் பணியை அவர்கள் செய்தார்கள்.. யூடியூப் இருக்கு நமக்கு என்று கூறியுள்ளார். எனவே சென்சாரில் வெட்டப்பட்ட காட்சிகள் விரைவில் யூடியூபில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த கத்திரி தியேட்டருக்கு மட்டும் தான். அதுவும் முதல் 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சிகளில் தான்.. சொல்ல வந்த கருத்து அப்படியே அனுமதிக்கப்பட்டு இருக்கு.. தணிக்கை குழு மிக நியாயமாக நடந்து கொண்டார்கள்.. அவர்களின் பணியை அவர்கள் செய்தார்கள்.. Youtube இருக்கு நமக்கு.. https://t.co/3IvJU0xTRk
— Mohan G ???? (@mohandreamer) February 19, 2020