இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் இயக்கிய ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் பெரும்பாலானோரால் வரவேற்பை பெற்று இணையதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது. ஒருசிலர் இந்த குறும்படம் கள்ளக்காதலுக்கு வழிவகுப்பதாக புரிதல் இன்றி விமர்சனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் கவுதம்மேனனுக்கு ‘திரெளபதி’ பட இயக்குனர் ஜி மோகன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கவுதம்மேனன் அவர்களே! பல இளைஞர்கள் உங்கள் திரைப்படம், மேக்கிங் ஸ்டைல், வசனங்கள், திரைப்பட தயாரிக்கும் முறை, பாடல்களில் உள்ள புதுமை ஆகியவற்றை ரசித்து வருகின்றனர். அவ்வாறு உங்கள் படங்களை ரசிக்கும் இளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்க முயற்சிக்காதீர்கள். எங்களுடைய மனச்சோர்வை நீக்குவதற்கு நீங்கள் கண்டிப்பாக தேவை. ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை என பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் மோகனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இரண்டே படங்கள் இயக்கிய மோகன், பல வெற்றி படங்களை இயக்கிய கவுதம்மேனனுக்கு அறிவுரை கூறுவதா? என்கிறரீதியில் பல கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.
@menongautham sir.. Many youngsters following your movie, style, dialog deliveries, movie making pattern, song grabbing mind, hand kada everything.. Don't try to poison their minds.. Jessieroy , I need you at any cost for relieving my depression. As a fan this is my request sir.
— Mohan G ??❤️ (@mohandreamer) May 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com