அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலைப்பயணத்தை தொடருங்கள்: கமலுக்கு அட்வைஸ் செய்த இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என கமல்ஹாசனுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் டுவிட்டரில் அட்வைஸ் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கமல்ஹாசன் உள்பட அவரது கட்சியைச் சேர்ந்த அனைவரும் தோல்வியடைந்தனர் என்பதும் பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கமல் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு அரசியல் சரிப்பட்டு வராது என ஏற்கனவே பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கூறியிருக்கும் நிலையில் தற்போது திரெளபதி’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் கமலுக்கு அட்வைஸ் அறிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
கமல்ஹாசன் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை’ என்று கூறியுள்ளார். மோகனின் இந்த டுவிட்டுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
@ikamalhaasan சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை.
— Mohan G Kshatriyan ?? (@mohandreamer) May 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com