'திரெளபதியின் முத்தம்': தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. கிராமிய பாடகி மாரியம்மாள் அவர்கள் பாடிய ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலும் தேனிசை தென்றல் தேவா பாடிய ’பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலும் மிகப் பெரிய ஹிட்டானது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது. இது குறித்து ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலின் டைட்டிலாக ’திரெளவுபதியின் முத்தம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த பாடலுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
After the phenomenal success of first two #Karnan singles, am extremely excited to announce the #3rdSingle of #Karnan #DraupathaiyinMuttham releasing on March 11th @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @thinkmusicindia @ZeeTamil @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 pic.twitter.com/Wa2u1CI3SM
— Kalaippuli S Thanu (@theVcreations) March 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments