'திரெளபதியின் முத்தம்': தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. கிராமிய பாடகி மாரியம்மாள் அவர்கள் பாடிய ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலும் தேனிசை தென்றல் தேவா பாடிய ’பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலும் மிகப் பெரிய ஹிட்டானது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது. இது குறித்து ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலின் டைட்டிலாக ’திரெளவுபதியின் முத்தம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த பாடலுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'டாக்டர்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்: சின்னகேப்டன் விஜயபிரபாகரன் ஆவேசம்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக சற்றுமுன் பிரிந்ததை அடுத்து நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

முடிவுக்கு வந்தது ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானிசங்கர். இவர் 'களத்தில் சந்திப்போம்' 'குருதி ஆட்டம்' 'ஓ மணப்பெண்ணே

மகளிர் தினத்தில் மனைவியுடன் சேலன்ஜ்? நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட வேற லெவல் வீடியோ!

நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்பிக்கப் பட்டது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்

கிரிக்கெட் பந்தை தூக்கி விளாசும் நடிகர் யோகி பாபு? வைரல் வீடியோ!

தமிழில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் நடிகர் யோகி பாபு  ஒரே நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.