கல்யாணத்தில் டான்ஸ்… கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

 

உத்திரப்பிரேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய கல்யாணத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்வால் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார். பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் கண்ணாஜ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக கடந்த வெள்ளிக் கிழமை அன்று நடந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி டான்ஸ், பாட்டு என கோலாகலமாகக் கொண்டாடி இருக்கின்றனர்.

அந்நிகழ்வின்போது மணமகனின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து மணமகளை டான்ஸ் ஆடும் மேடைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று இருக்கின்றனர். இதனால் கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார். காரணம் நண்பர்களின் செயலைக் கண்டிக்க முடியாத கணவன் தன்னை எப்படி பார்த்துக் கொள்வார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

மேலும் அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்தையில் இச்சம்பவம் பூதாகரமாகி வரதட்சணை வழக்காக மாறி இருக்கிறது. இதனால் நடந்த பேச்சுவார்த்தையில் மணமகன் வீட்டார் பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட செலவீனங்களைச் சரிப்படுத்த 6.5 லட்சம் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர். பின்னர் மீண்டும் திருமணத்தை நடத்த பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சியும் வீணாகி இறுதியில் திருமணமே நின்றுபோனது.