இளைஞர்களைத் தாக்கும் உருமாறிய கொரோனா? எச்சரிக்கும் வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 31 2021]
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் மரபணு மாறிய கொரோனாவும் இந்தியாவில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் அதிகமாகப் பரவும் தன்மைக் கொண்ட இங்கிலாந்து வகையறா கொரோனா மற்றும் வீரியம் அதிகம் கொண்ட தென் ஆப்பிரிக்க கொரோனாவும் தற்போது இந்தியாவில் தலைத்தூக்கத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய வைரஸ்கள் பெரும்பாலும் இளைஞர்களை குறிவைத்துத் தாக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாறிய கொரோனாவால் பாதிக்கப்படும் இளைஞர்கள் மற்ற வைரஸ்களை விட மிக எளிதான சில அறிகுறிகளையும் கொண்டு உள்ளனர். இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவையுள்ளது என மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில் புதியவகை கொரோனா குறித்து டாக்டர் விஜய் சக்கரவர்த்தி அவர்கள் பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார்.
தற்போது பெரும்பாலான இந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில் புதியவகை கொரோனா நோய்த்தொற்று யாரை அதிகம் பாதிக்கிறது?, அதன் புதிய அறிகுறிகள் என்னவாக இருக்கிறது?, இளைஞர்களை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில் புதியவகை கொரோனா நோய்த்தொற்று குறித்து இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து டாக்டர் விஜய் சக்கரவர்த்தி அவர்கள் பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாகக் கூறப்படும் இந்நேரத்தில் இந்த வீடியோ நேர்காணல் சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.