50 வருட கனவு நனவாகிவிட்டது.. ரஜினியை சந்தித்த பின் ட்விட் செய்த பிரபல தொழிலதிபர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் டாக்டர் வேலுமணி அவர்கள் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் தன்னுடைய 50 வருட கனவு ஆகிவிட்டது என்று தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வேலுமணி என்பவர் இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்பதும் கோவையில் படித்து முடித்த அவர் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்று மூன்று நாட்கள் ரயில் நிலையத்தில் தங்கி இருந்தார். அதன் பின் மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை கிடைத்தவுடன் வேலை கிடைத்து விட்டது, வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டோம் என்று முடிவுக்கு வராமல், தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார். முதலில் முதுகலை பட்டம், அதன்பின்னர் பி.எச்.டி டாக்டர் பட்டம் ஆகியவை படித்து தற்போது அவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் டாக்டர் வேலுமணி அவர்கள் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி அவர் கேள்விப்பட்டு வைத்திருக்கிறார், என்னுடைய கதையையும் என்னுடைய பயணத்தையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அவருடனான 40 நிமிட சந்திப்பு எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை கொடுத்தது, என்னுடைய பஞ்ச் டயலாக்கை என்னிடமே அவர் கூறியதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவருடைய பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது, என்னுடைய 50 வருட கனவு நனவாகிவிட்டது’ என்று தெரிவித்தார் இந்த சந்திப்பின்போது நடிகர் சிவகுமார் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dream come true. 50 yrs wait.
— Dr. A. Velumani.PhD. (@velumania) March 17, 2024
Happy to know he has heard me. My story. My journey. Gave 40 full mins. #Superstar telling my #Punchlines to me, was never expected. Cool Smile. Undiluted focus. While parting he said “Keep Motivating”. Wow.
What a journey and what a humility.… pic.twitter.com/hUW56sYR1O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments