தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அசைவம் சாப்பிடலாமா? விளக்கம் அளிக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பற்றிய பீதி இன்றைக்கும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் இந்தப் பெருந்தொற்று தனது இரண்டாவது அலையில் ஏகப்பட்ட சுகாதார நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, வேக்சின் பற்றாக்குறை, சிகிச்சை மருந்துக்களுக்கான பற்றாக்குறை எனப் பல்வேறு முறைகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இப்பெருந்தொற்றுக்கு ஒரே தீர்வாக கொரோனா தடுப்பூசி மட்டுமே கருதப்படுகிறது. இந்தத் தடுப்பூசி குறித்த பயத்தையும் பொதுமக்கள் முன்வைத்து வருகின்றர். குறிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மறைமுகமாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த அச்சத்தை விடவும் கொரோனா படுத்தும் பாடு உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதனால் எதிர்ப்பு அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பலரும் ஊக்குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும்போது சில உணவு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மது அருந்துபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பும் பின்பும் மது வகைகளைத் தொட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். காரணம் இந்த ஆல்கஹாலில் இருக்கும் நச்சுத் தன்மைகள் ஒருவேளை கொரோனா தடுப்பூசியின் திறனைக் குறைத்து விடலாம் என்ற கருத்தும் இருந்து வருகிறது.
இப்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது என்ன வகையான உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? அசைவ உணவுகளைச் சாப்பிடலாமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மருத்துவர் சுசித்ரா அவர்கள் விளக்கம் அளித்து பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com