சரிந்துபோன பொருளாதாரம் எப்போது உயரும்… விளக்கும் பிரத்யேக வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10-24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் சிறு, குறு வணிகம் முதற்கொண்டு அனைத்து பெரு வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கும். இதனால் வணிகர்களுக்கு மட்டும் அல்ல அரசிற்கும் வரிவருவாய் இழப்பீடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் கடந்த ஊரடங்கு காலத்தின்போதே தமிழகத்தின் ஜிடிபி குறைந்து விட்டதாகப் பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். ஒரு காலத்தில் இந்தியாவிலேயே அதிக ஜிடிபி கொண்டு இருந்த தமிழகம் தற்போது கொரோனா பாதிப்பினால் மொத்த வரி வருவாயையும் இழந்து இருக்கிறது.

இதுபோன்ற நிலைமைகளில் சமானிய மக்களின் பொருளதாரம் அதைவிட கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் சிறு, குறு வணிக நிறுவனங்களும் பெரும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும்போது அன்றாடக் கூலிகளின் நிலைமை அதிவிட மோசமாகி இருக்கிறது. இதனால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்ற தவணை கடனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் படியும் அதேபோல அதிகபடியான சேவை வரியை ரத்து செய்ய வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

கார், வீடு போன்ற பொருட்களுக்கு வாங்கி இருக்கும் லோனை திருப்பி செலுத்துவற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இழந்து போன வரி வருவாயை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்ற கேள்வியை பொருளாதார அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இதுபோன்ற கேள்விகளுக்கு பொருளாதார வல்லுநரும் எழுத்தாளருமான சோம வள்ளியப்பன் அவர்கள் பதில் அளித்து பிரத்யேக நேர்காணல் வழங்கி உள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.