நான் இனிமேல் அழமாட்டேன்: கணவரின் நினைவு நாளில் நெகிழ்ச்சியான பதிவு செய்த சேதுராமன் மனைவி!

நான் இனிமேல் அழ மாட்டேன் என கணவரின் நினைவு நாளில் நடிகரும் டாக்டருமான சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சியான பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த டாக்டர் சேதுராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி திரையுலகினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் சேதுராமன் மரணம் அடைந்தபோது அவரது மனைவி உமா 5 மாத கர்ப்பமாக இருந்தார் என்பதும் அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பெற்ற போது தனது கணவரே மீண்டும் திரும்பி வந்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சேதுராமனின் 2வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் உமா தனது சமூக வலைத்தளத்தில், ‘நான் இனிமேல் அழ மாட்டேன் என்றும் நான் அழுதால் இந்த உலகைவிட்டு சென்ற எனது கணவரின் ஆத்மாவுக்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் நாம் ஒரு ஆத்மாவை தான் இழந்தோம், ஆனால் அவரோ தான் சேர்த்து வைத்து இருந்த அத்தனையும் ஆத்மாக்களையும் பிரிந்து சென்று விட்டதால் அவருக்கு தான் வலி அதிகம் என்றும் உமா பதிவு செய்துள்ளார். இந்த பதிவை படிக்கும்போது கண் கலங்குவதாக பலர் கமென்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': 5 மொழி அட்டகாசமான போஸ்டர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது 

'மங்காத்தா' அர்ஜூன் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் இவரா? இது சமந்தாவுக்கு தெரியுமா?

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மங்காத்தா' திரைப்படத்தில் உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுன் கேரக்டரில் முதலில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டவர் இவர்தான் என்று இயக்குனர் வெங்கட்பிரபு

டக்குன்னு தமன்னா தான்னு நினைச்சிட்டேன்: ப்ரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ப்ரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென சற்றுமுன்னர் தமன்னா ஸ்டைலில்

ரஜினி பாராட்டியதை வெளியே சொல்லி விளம்பரம் தேட விருப்பமில்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்

விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் படத்தை இயக்கிய இயக்குனர், 'ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து பாராட்டியதை வெளியே சொல்லி விளம்பரம் தேட விரும்பவில்லை என கூறியுள்ளார்

வெறும் ராஜமெளலி அல்ல, மஹா ராஜமெளலி: 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பிரமாண்டமான திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்'  நேற்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியானது