மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து!

மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன். பிரபல தோல் நோய் நிபுணராக இவர் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் ’வாலிபராஜா’ ’சக்க போடு போடு ராஜா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய இரண்டே நாட்களில் திடீரென இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். சேதுவின் மறைவு அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் உள்பட பல திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. 35 வயதில் ஒரு நல்ல டாக்டர் மற்றும் நடிகர் மறைந்தது திரையுலகிற்கு மட்டுமின்றி மருத்துவ உலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது

இந்த நிலையில் சேது மரணமடைந்தபோது அவரது மனைவி உமையாள் கர்ப்பமாக இருந்தார். இதனை அடுத்து அவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும் ’குட்டிசேது’ பிறந்துவிட்டதாகவும், சேதுவே மறுபிறவி எடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்

More News

மாளவிகா மோகனனுக்கு 'மாஸ்டர்' இயக்குனரின் சிறப்பு பரிசு

கடந்த சில ஆண்டுகளாகவே மாஸ் நடிகர்களுக்கு பிறந்தநாள் வரும் போதெல்லாம் காமன் டிபி போஸ்டர் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ!!!

கால்பந்து உலகின் ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரோனால்டோ கார்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்.

எகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா??? புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்!!!

விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எலான் மஸ்க்

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்

இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சினம்'.இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்துவிட்

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை என்ற அம்சத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்பது தெரிந்ததே.