இந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்? அதிகாரப்பூர்வத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி இந்தியச் சந்தைகளில் கிடைக்கும் என நிதி ஆயோக்கின் உறுப்பினர் வினோத் குமார் பால் தற்போது தகவல் வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கோவேக்சின், கோவிஷீல்டு இரு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 18-45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அறிவிக்கப்பட்ட பின்னரும் தட்டுப்பாடு காரணமாக இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட வில்லை.
இதனால் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி அளித்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டது. இதில் 91.6% செயல்திறன் கொண்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தடுப்பூசியின் முதல் பேட்ச் தற்போது இந்தியா வந்தடைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜுலை மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் இதற்காக டாக்டர் ரெட்டீஸ் லேப்பிடம் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் வினோத் குமார் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஸ்புட்னிக் வி உட்பட இந்தியாவில் மொத்தம் 6 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் இதனால் அடுத்த 5-6 மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தேவையான 216 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் வினோத் குமார் பால் தெரிவித்து உள்ளார்.
தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவிலேயே தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வரும் ஜுலை முதல் பணி துவங்க உள்ளது. மேலும் ஸ்புட்னிக் வி முதல் பேட்ச் இந்தியா வந்துள்ளதால் அடுத்த வாரமே இந்திய சந்தைகளில் இந்த மருந்து கிடைக்கும் என்பதும் ஒரு டோஸின் விலை ரூ.1000 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments