200 தமிழர்களுக்கு உதவிய பிரபல நடிகருக்கு டாக்டர் ராம்தாஸ் நன்றி!
- IndiaGlitz, [Sunday,June 07 2020]
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த பலர் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திரையுலகில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் சோனு சூட். திரையில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்வில் ஹீரோவாக இவர் பல புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு ரயிலும் விமானத்திலும் தனது சொந்த செலவில் அனுப்பி வருகிறார்.
அந்த வகையில் மும்பையில் சிக்கிய சுமார் 200 தமிழர்களை விமானம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பேருந்து மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் முதல் பேருந்து நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். மேலும் பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் அவர் கேட்டுக்கொண்டதோடு, வழியில் தேவைப்படும் உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் கொடுத்து அனுப்பினார்.
இந்த நிலையில் மும்பையில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் செல்ல உதவி செய்த சோனு சூட் அவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் மும்பையில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 200 பேரை தமது சொந்த செலவில் பேருந்துகளை அமர்த்தி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் இந்தி திரைப்பட நடிகர் சூனு சோட். மகிழ்ச்சி. இதேபோல பல உதவிகளை செய்துள்ள அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்! என தெரிவித்துள்ளார்.
சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் மும்பையில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 200 பேரை தமது சொந்த செலவில் பேருந்துகளை அமர்த்தி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் இந்தி திரைப்பட நடிகர் @SonuSood. மகிழ்ச்சி. இதேபோல பல உதவிகளை செய்துள்ள அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!#CoronaWarriors
— Dr S RAMADOSS (@drramadoss) June 7, 2020