ரஜினி கட்சியுடன் கூட்டணியா? டாக்டர் ராமதாஸ் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்றும் தமிழருவி மணியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்
எனினும் ரஜினியிடமிருந்து அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும் இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்றும் தமிழருவி மணியன் மேலும் கூறியிருந்தார். இதற்கு பாமக தரப்பில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக எந்தவிதமான விளக்கமும் வரவில்லை. இதனை அடுத்து அரசியல் விமர்சகர்கள் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கின்றதா? என்பது குறித்து விவாதம் நடத்த தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் டாக்டர் ராம்தாஸ் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோம் என யோசிக்கிறேன் என்றும், ரஜினி கட்சி தொடங்கட்டும் அதன்பின் பார்க்கலாம் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். ராமதாஸ் அவர்களின் இந்த பதிலில் இருந்து ரஜினியுடன் அவர் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments