'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை நேற்று பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.
மேலும் இந்த படம் குறித்து அவர் கூறியபோது, ’பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை வெற்றிமாறன் அழுத்தமாக கூறியிருந்ததையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் முக ஸ்டாலினின் ‘அசுரன்’ படத்தின் விமர்சனம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என்று தெரிவித்துள்ளார்.
‘அசுரன்’ திரைப்படத்தை வைத்து அரசியல்வாதிகள் வழக்கம்போல் அரசியல் செய்ய் தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 17, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout