கமலின் 'விஸ்வரூபம்' குறித்து கருத்து கூறிய பாமக ராம்தாஸ்
- IndiaGlitz, [Friday,July 07 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக சொல்லி கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவருடைய டுவீட்டில் அரசியல் இருக்கும். சிலசமயம் அரசியல்வாதிகளை மறைமுகமாக நையாண்டி செய்தும் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்திருப்பார்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் நேரடியாகவே அரசியல்வாதிகளை தாக்கி வருகிறார். அவருக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் நடந்த டுவிட்டர் போர் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ஜிஎஸ்டி பிரச்சனை குறித்து கமல் கருத்து தெரிவித்தபோது, "தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது என்றும் தமிழகம் ஊழலில் பிகாரையே விஞ்சிவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
கமலின் இந்த கருத்து குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தனது சமூக வலைத்தளத்தில், 'ஊழலில் பிகாரை மிஞ்சி விட்டது தமிழகம்: நடிகர் கமலஹாசன்- கமலஹாசனின் விஸ்வரூபத்தை பாருங்கள்! என்று கூறியுள்ளார். ராமதாசின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் பாராட்டியும், கிண்டல் செய்தும் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.