தமிழில் நாயகியாக அறிமுகமாகும் நட்சத்திர தம்பதியின் மகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
'இதுதாண்டா போலீஸ்' பட புகழ் டாக்டர் ராஜசேகர்- நடிகை ஜீவிதா தம்பதியினர் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிரபலம் என்பது தெரிந்ததே. மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கட்பிரபுவின் 'R.K.நகர்' படத்தில் டாக்டர் ராஜசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் டாக்டர் ராஜசேகர்- நடிகை ஜீவிதா தம்பதியினரின் மகள் ஷிவானி விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரையுலகில் நுழைவது குறித்து ஷிவானி கூறுகையில் 'நான் தற்போது டாக்டருக்கு படித்து வருகிறேன். படிப்பு முடிந்ததும் நடிக்க முடிவு செய்துள்ளேன். மேலும் பரதநாட்டியம் , குச்சுபுடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட் , கிடார் , வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். அதுமட்டுமின்றி கிக்பாக்சிங்கும் பழகி வருகிறேன்.
எனக்கு பிடித்த நடிகர் தனுஷ், விஜய்சேதுபதி, விஷால். தனுஷின் '3' படம் பார்த்து அழுது இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments