நீராவி கொரோனாவை கட்டுப்படுத்துமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரம் பெற்று இருக்கிறது. இதே போன்ற ஒரு நிலைமையை சீனாவின் உகான் நகரம் கடந்த ஆண்டு 2020 துவக்கத்தில் அனுபவித்து வந்தது. ஆனால் அந்த நகரத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றுக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் நோய்ப் பரவல் அளவும் சீனாவில் முழுமையாக குறைந்து போய் இருக்கிறது.
இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது கொரோனா பரவியபோது சீனர்கள் அலோபதி மருந்துகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் அந்த நாட்டின் பழங்கால மருத்துவ முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாகக் கூறப்படுகிறது. மேலும் சீனப் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து பெட்டகத்தை அனைத்து வீடுகளுக்கும் அந்த அரசாங்கமே சப்ளை செய்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது இந்தியாவிலும் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சித்த மருத்துவத்திற்கும் ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கும் முக்கியத்தும் கொடுத்து வருகிறோம். அந்த அடிப்படையில் நீராவி என்பதும் ஒன்றாகப் பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நீராவி எனப்படும் ஆவிப் பிடித்தால் கொரோனா போய்விடுமா? என்ற சந்தேகத்தைச் சிலர் எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்துள்ள மருத்துவர்கள் நீராவி என்பது ஒரு வைரஸையோ அல்லது பாக்டீரியாவையோ கொல்லும் தன்மைக் கொண்டது அல்ல. ஆனால் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் இது ஒரு தற்காப்பு விஷயமாக இது பயன்படும் என்றும் நீராவி மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகளில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரிசெய்து, சுவாசத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீராவி பிடிப்பதால் என்ன பயன்? அதை எப்படி செய்ய வேண்டும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து டாக்டர் ராஜா அவர்கள் பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார். அந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout