சாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா? வைரலாகும் டிப்ஸ் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

இன்றைய நகர வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு. இதற்கான தீர்வுகளை நோக்கி பலரும் வொர்க் அவுட், யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல், வாக்கிங் எனப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏன் இன்னும் சிலர் மணிக்கணக்கான ஜிம்மிலேயே நேரத்தை செலவழிக்கவும் செய்கின்றனர்.

இப்படி ஓராயிரம் விதிமுறைகளைப் பின்பற்றினாலும் மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறையை மாற்றாமல் வேறு எந்த நற்பலன்களையும் அனுபவிக்க முடியாது என்கிறார் டாக்டர் ராஜா. மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையை எப்படி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது என்பது குறித்தும் உடல் உடை குறைப்பு குறித்து நமக்கு டாக்டர் ராஜா பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அதில் பல்வேறு பயனுள்ள தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

மேலும் நவீன உலகத்தில் செய்யக்கூடாத பல விஷயங்களையும் பழக்க வழக்க முறைகளையும் குறித்து அவர் தன்னுடைய பேட்டியில் பட்டியல் கொடுத்து இருக்கிறார். இந்த மாதிரியாக விஷயங்களை செய்யாமல் தவிர்த்து விட்டால் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் அவர் நம்பிக்கை அளித்து உள்ளார். அதோடு சாப்பிடாமல் இருப்பதால் எந்த நல்ல பயனும் வராது. சமைக்கப்படாத பழம், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டு கலோரியை உணவில் குறைக்க முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும்.

அதோடு உடல் எடை குறைப்புக்காக ஜிம்மிற்கு செல்லும் நிறைய பேர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க தவறி விடுகின்றனர். இதனால் மீண்டும் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே உடல் எடை, தொப்பை குறைப்புக்கு செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. மனிதன் அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த கருத்தோடு பல டிப்ஸ்களையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் பலரும் வீடே கதி என அடைந்து கிடக்கிறோம். மேலும் வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் பலரும் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் டாக்டர் ராஜாவின் பல கருத்துகள் நமக்கு பயனுடையதாக அமையும். இந்த நோக்கத்திற்காக இந்த வீடியோ தற்போது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.