கொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ!
- IndiaGlitz, [Monday,May 17 2021]
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் தற்போது இந்தியாவே தத்தளித்து வருகிறது. புனித நதியாகக் கூறப்படும் கங்கையில் நாள்தோறும் பிணங்கள் குவிந்து வருகின்றன. அதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் கங்கையில் பிணங்கள் எறியப்படுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
மேலும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் திவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் 3 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது. இருந்தும் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் கூடுகிறது.
இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட மருத்துவர் பிரகாஷ் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றை மக்கள் தற்போது உணரத் தொடங்கி விட்டனர். ஆனால் பாதிப்பு எகிறிக் கொண்டே வருகிறது. இதற்கு முழு முதற்காரணம் அண்டை வீடு, பக்கத்து வீடு, உறவினர்கள் என்று கூட்டாக இருக்கும் நேரங்களில் நாம் பாதுகாப்பை காற்றில் பறக்க விட்டு விடுகிறோம். அதிலும் வயதானவர்களுக்கு இப்படி கொரோனா பரவும் போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனால் பொதுமக்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது உறவினர்களிடமோ பேசும்போது பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஆக்சிஜன் நிலை குறித்து எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். மேலும் தற்போது பரவி வரும் நோய்த்தொற்றில் இருந்து எப்படி விழிப்பாக இருப்பது? அறிகுறிகள் இருக்கும்போது எப்படி அதை சரிசெய்து கொள்வது போன்ற பல்வேறு வழிமுறைகளை எடுத்துக் கூறி டாக்டர் பிரகாஷ் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.