கொரோனா 2 wave அறிகுறி எப்படி இருக்கும்? விளக்கம் அளிக்கும் மருத்துவரின் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்பக் கட்டத்தல் சளி, காய்ச்சலை மட்டுமே கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது பரவிவரும் கொரோனா அறிகுறிக்கும் சாதாரண உடல்நலக் கோளாறுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. இதனால் சாதாரண உடல் சோர்வா அல்லது கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறியா எனப் பலரும் குழம்பி போகும் நிலைமையும் உருவாகி வருகிறது.
அதோடு தற்போது பரவிவரும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியே இல்லாமலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பீதியை கிளப்பி வருகிறது. அதிலும் இந்தியாவில் கடந்த 14 ஆவது நாளாக 3 லட்சத்தைத் தாண்டி தினம்தோறும் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோய்த்தொற்று குறித்த பீதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறியை எவ்வாறு புரிந்து கொள்வது? ஒருவேளை அறிகுறி இருந்தால் உடனடியாக என்ன செய்வது? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து மருத்துவர் பவித்ரா வெங்கடகோபாலன் அவர்கள் சிறப்பு நேர்காணல் அளித்து உள்ளார். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தில் தனது பிஹெச்டி படிப்பை முடித்த இவர் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தை கவனித்து வருகிறார். மேலும் Health Diagnostic Center இன் இயக்குநராக பணியாற்றி வரும் இவரின் கணிப்பு பல வழிகளில் பயன் உடையதாக இருக்கும்.
அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்று வந்தால் என்ன செய்வது? அறிகுறியை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து மருத்துவர் பவித்ரா அளித்துள்ள இந்த வீடியோ விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments