10 படத்துல நடிச்சிட்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி
- IndiaGlitz, [Thursday,July 20 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஒருசில கட்சிகள் கனவு கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த செய்திகள்.
இருவருமே மிகபெரிய ரசிகர்கள் கூட்டம் மற்றும் பொதுமக்கள் ஆதரவை பெற்றவர்கள் என்பதால் இருவரும் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ அரசியல் களத்தில் இறங்கினால் ஒரிரண்டு கட்சிகளை தவிர மீதி கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சற்றுமுன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கருத்துகூறிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: முன்னணி இடத்தில் இருக்கும் ஒருசில நடிகர்கள், ஒரு பத்து படத்தில் நடித்துவிட்டு, பவுடர் பூசி வெளியே வந்து 'தளபதி' என்று பட்டத்தை வைத்து கொள்வதோடு உடனடியாக முதலமைச்சர் பதவிக்கும் ஆசைப்படுகின்றனர். இவர்களுடைய கனவு நிறைவேறாது. மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.