செக்ஸ் வீடியோ பார்க்கும் பழக்கத்தை விடுவது எப்படி? நிபுணரின் பிரத்யேக வீடியோ விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய தலைமுறையைப் பொருத்த வரையில் போனோஃகிராபி (செக்ஸ்) வீடியோ பார்ப்பது மிக இயல்பான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இத்தகைய செக்ஸ் வீடியோவிற்கு பல இளைஞர்கள் அடிமையாகவும் மாறிவிட்டனர். அதுவும் செல்போன் வசதி பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் சிறு வயதில் இருக்கும் சிறுவர்கள் கூட இத்தகைய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில் செக்ஸ் வீடியோ பார்க்கும் பழக்கத்தில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது என்பது குறித்து டாக்டர் கவிதா நமக்கு பிரத்யேக வழிமுறைகளையும் சில டிப்ஸ்களையும் கூறியிருக்கிறார். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் அவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலமும் எளிமையாக இத்தகைய பழக்கத்தில் இருந்து வெளிவந்துவிட முடியும்.
அதோடு செக்ஸ் வீடியோ என்பது மட்டும் அல்லாமல், செக்ஸ் ஆசையைத் தூண்டும் கதைகளைப் படிப்பது, புத்தகத்தைப் படிப்பது இதுபோன்ற தவறான பழக்கத்திலும் இளைஞர்கள் மாட்டிக் கொண்டு விடுகின்றனர். இத்தகைய அடிமைப் பழகத்தில் இருந்து வெளிவருவதற்கான வழிமுறைகளையும் டாக்டர் கவிதா தெரிவித்து உள்ளார். அதோடு சிறுவர்-சிறுமிகள் இதுபோன்ற தவறான வழிகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளையும் டாக்டர் கவிதா இந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
மேலும் செக்ஸ் வீடியோவை பார்த்து விட்டு அதேபோன்ற எதிர்ப்பார்ப்பை கொண்டு இருக்கிற இளைஞர்களுக்கும் டாக்டர் கவிதா சில ஆலோசனைகளை இந்த வீடியோவில் கூறி இருக்கிறார். இதுபோன்ற தவறான பழக்கங்கள் அன்றாட வாழ்க்கையில் எந்த விதமான பாதிப்பை தொழில் முறையிலும் உடல் அளவிலும் ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் அதில் இருந்து வெளிவருவது குறித்தும் ஒரு நெடிய விளக்கத்தை டாக்டர் கவிதா அவர்கள் இந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். கொரோனா நேரத்தில் செல்போனில் நேரத்தை செலவிட்டு இதுபோன்ற தவறான பழக்கத்தில் மாட்டிக் கொண்டு விட்ட இளைய தலைமுறையினருக்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments