மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்யனும்? ஆலோசனை வழங்கும் பிரத்யேக வீடியோ!
- IndiaGlitz, [Thursday,April 22 2021]
சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனது 59 ஆவது வயதில் உயிரிழந்தார். மேலும் இதேபோன்று தொலைக்காட்சி பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தொடர்ந்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மாரடைப்பு என்னும் நிலையை எப்படி தெரிந்து கொள்வது, இதுபோன்ற நிலைமைகளில் என்ன செய்வது என்பதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து சிறப்பு நேர்காணல் வழங்கி இருக்கிறார் மருத்துவர் கவிதா.
இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. மேலும் இணை நோய் உள்ளவர்களுக்கு இதுபோன்ற மாரடைப்பு ஏற்படும் அளவு மற்றவர்களை விட சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி, ஒருவேளை இந்த நிலையை முன்னமே அறிந்து கொள்ள முடியுமா? என்பது குறித்தும் மருத்துவர் கவிதா நமக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
கூடுதலாக ஒருவருக்கு மாரடைப்பு அல்லது நெஞ்சில் வலி ஏற்பட்டு சரிந்து விழுந்தால் உடன் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் கவிதா பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். நாகரிக வாழ்வியல் முறையில் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கான நோய் என்றில்லாமல் சிறிய வயதில் உள்ள இளைஞர்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற நிலைமைகளை எப்படி தவிர்ப்பது என்பது குறித்தும் இளைய தலைமுறையினருக்கு மருத்துவர் கவிதா அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.