ஆண் உறுப்பை பெரிதாக்க வேண்டுமா? Expert கூறும் பெஸ்ட் அட்வைஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு ஆணுறுப்பின் அளவு பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் கவலையை வெறும் உடலுறவு, குடும்பவாழ்க்கைக்கு மட்டும்தான் என நாம் இதுவரை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உளவியல் அடிப்படையில் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது எனும் கவலை ஒருவரின் ஆளுமையைக் கெடுத்துவிடுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு நபர் தனது ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என நினைக்கத் துவங்கிவிட்டால் அவர் பல இடங்களில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் மனதளவில் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார். எனவே இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க வேண்டும் என்றால் ஆணுறுப்பு குறித்த முழுமையான புரிதல் ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் ஆணுறுப்பு பற்றிய குழப்பங்களையும் சந்தேகங்களை தீர்த்து வைத்து இருக்கிறார் உளவியல் மருத்துவர் டாக்டர் கே.காமராஜ். இவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என ஆண்கள் கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். மேலும் உண்மையிலேயே சிறிய ஆணுறுப்பு இருக்கும் ஆண்களுக்கு ஏற்ப தற்போது பல சிகிச்சை முறைகள் இருப்பதாகவும் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இதற்கெல்லாம் கவலைப்படவே தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ஒரு நபரின் உடல் தோற்றத்தை பொறுத்து அவரது ஆணுறுப்பு எப்படி மாற்றம் பெறுகிறது. இதை எப்படி சரிசெய்வது என்றும் டாக்டர் காமராஜ் அவர்கள் சிறந்த வழிமுறைகளை கூறியுள்ளார். அவர் அளித்த நேர்காணல் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments