தற்கொலை மெஷினுக்கு அங்கீகாரம் கொடுத்த அரசு… பகீர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்கொலை செய்துகொள்வதே கோழைத்தனம், அது சட்டத்திற்கு எதிரானது எனப் பல்வேறு நாடுகளில் சட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்துகொள்வதற்கு வசதியாக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொள்வது தவறான விஷயமாகக் கருதப்பட்டாலும் உடல்நலக் கோளாறால் அவதிப்படும் மனிதர்களுக்கு வசதியாக சில நாடுகளில் கருணைக் கொலை அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் கருணைக்கொலையை அதிகளவில் அனுமதிக்கும் நாடுகளுள் ஒன்றாக சுவிட்சர்லாந்து விளங்கிவருகிறது. அந்த வகையில் கடந்த 1942 களில் இருந்தே அந்நாட்டில் தற்கொலை அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மேலும் கடந்த 2020 இல் மட்டும் 1,300 பேர் அனுமதிப்பெற்று அந்நாட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வலியே இல்லாமல் உணர்ச்சியற்று தற்கொலை செய்துகொள்ளும் பொருட்டு அந்நாட்டின் எக்சிட் இண்டர்நேஷனல் எனும் நிறுவனம் Dr Death எனும் புது கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவிக்குள் ஒருநபர் அமர்ந்து கொண்டால் உள்ளே செல்லும் ஆக்சிஜன் வாயு முதலில் குறைந்து போகுமாம். பின்னர் எந்தவித வலியும் உணர்ச்சியும் இல்லாமல் வெறும் 30 வினாடிகளில் அந்த நபர் இறந்துவிடுவாராம்.
மேலும் Dr Death எனப்படும் அந்தத் தற்கொலை சாதனம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு அனுமதிப் பெறுபவர்களுக்கு மாத்திரை கொடுத்து கருணை கொலை செய்யும் வழக்கமே இருந்துவந்தது. தற்போது புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த வருடம் முதல் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com