கொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது? மருத்துவரின் அதிர்ச்சி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது. இது 3, 4 என நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உருமாறி பரவிவரும் பி1617 கொரோனா வைரஸைப் பார்த்து உலகமே பயந்து நடுங்குகிறது. காரணம் முதல் அலை தொற்றின்போது பரவிய வேகத்தைவிட இரண்டாவது அலை தொற்றின்போது இதன் வேகம் தற்போது 10 மடங்கு அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் இரண்டாவது அலையில் உருமாறி பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வகைத் தொற்று மற்ற நாடுகளில் பரவிவிடாதபடி இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தற்போது தடை விதித்து இருக்கின்றன. இதனால் உருமாறிய வைரஸ் என்ன செய்யும்? அதன் அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தற்போது அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் அளவில் மாறவில்லை என்றும் ஒருவேளை இது அளவில் மாற்றம் அடைந்து இருந்தால் வேறுவிதமான ஆபத்தை விளைவித்து மனித இனமே இல்லாமல் போய் விடுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர் அருணாச்சலம் எச்சரித்து உள்ளார். இவர் கொரோனாவின் உருமாறிய நிலைக் குறித்தும் இந்தியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் நமக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கி உள்ளார். அந்த நேர்கணால் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
மேலும் இந்தியாவில் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்? இந்தப் பரவலை எப்படி தடுத்து நிறுத்துவது? பொதுவா மக்கள் இந்த மாதிரியான நேரத்தில் எப்படி பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளையும் டாக்டர் அருணாச்சலம் அவர்கள் இந்த வீடியோவில் வலியுறுத்திக் கூறியுள்ளார். மனித குலத்திற்கே பெரும் கேடாக மாறி இருக்கும் கொரோனா குறித்து இவர் அளித்துள்ள வீடியோ தற்போது கொரோனாவை புரிந்து கொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments