அடுத்த மார்ச் 2022 லும் கொரோனா மிரட்டுமா? பதைக்க வைக்கும் மருத்துவரின் வீடியோ விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வெறும் 11 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது தினம்தோறும் மூன்று லட்சத்தைத் தாண்டுகிறது. அதோடு பல மாநிலங்களில் மோசமான சுகாதாரக் கட்டமைப்பையும் இந்த கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தி இருக்கிறது. சுகாதாரக் கட்டமைப்பு குறைந்து இருக்கும் இதுபோன்ற நேரத்தில் பெருந்தொற்றை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்குறியும் தற்போது இந்தியா முழுக்கவே ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவைத் தவிர வளர்ந்த நாடான அமெரிக்காவிலும் இதே நிலைமைதான் தற்போது நீடித்து வருகிறது. அங்கு உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் சூழலும் கடும் அச்சத்தை வரவழைக்கிறது. மேலும் பிரேசில், மலேசியா போன்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் தற்போது எகிறி இருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு பெருந்தொற்றும் காலம்தோறும் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தி வந்தன? இந்தப் பெருந்தொற்றுகளை ஒரே அலையில் கட்டுப்படுத்தி விடமுடியுமா?
இரண்வடாது அலை என்பது தற்போது தீவிரம் அடைந்து இருக்கும் சூழலில் என்ன வகையான பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழும்புகின்றன. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளித்து டாக்டர் அருணாச்சலம் அவர்கள் நீண்ட விளக்கம் அளித்து பிரத்யேக நேர்காணல் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் தற்போது இரவுநேர ஊரடங்கு தவிர மேலும் சில கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படும் நிலையில் கொரோனா நோய்த்தொற்று அடுத்த வருடத்திலும் தொடரும் என்பது போன்று டாக்டர் அருணாச்சலம் அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்று இருககிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com